நஸ்ரியாவின் படங்கள்:
தமிழில், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற சில படங்களில் நடித்தாலும், கோலிவுட் திரையுலகில் தற்போது வரை தனி ரசிகர்கள் கூட்டத்திற் வைத்திருப்பவர் நஸ்ரியா. மலையாள நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், திரையுலகை விட்டு விலகிய நஸ்ரியா, கடந்த சில வருடங்களாக மீண்டும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சூட்சுமதர்ஷினி' படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.