பேட்ட பராக்! மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

Published : Apr 17, 2025, 03:08 PM IST

கூலி, ஜெயிலர் 2 என பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

PREV
14
பேட்ட பராக்! மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

Karthik Subbaraj with Rajinikanth again? Will the 'Petta' alliance come together? பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜுக்கு முதன்முதலில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம். கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரஜினிக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது.

24
Karthik subbaraj, suriya

ரெட்ரோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக சூர்யா உடன் கூட்டணி அமைத்தார். கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தை தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்...ரஜினியின் 1000 கோடி கனவில் மண்ணை அள்ளிப் போட வரும் பான் இந்தியா படம்; கூலி அப்போ காலியா?

34
Karthik Subbaraj, Rajinikanth

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஃபேன் பாய் சம்பவம்

சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் உடன் தான் அவர் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான் பேட்ட படம் மாஸ் ஹிட் அடித்த நிலையில், தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்தும், கார்த்திக் சுப்புராஜும் இணைய உள்ள தகவல் கோலிவுட்டில் செம வைரலாக பரவி வருகிறது.

44
Rajinikanth

ரஜினி கைவசம் உள்ள படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் கைவசம், தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படங்களை முடித்த பின்னர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ரஜினி கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Coolie Release Date: சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு; 'கூலி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories