Thug Life: தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

Published : Apr 17, 2025, 04:48 PM IST

சிம்பு மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  

PREV
14
Thug Life: தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர்:

அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர், சேத்தன், வடிவுக்கரசி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
 

24
Kamalhaasan Character

கமல்ஹாசனின் கதாபாத்திரம்:

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில், கமல் ஹாசன் 'ரங்கராய சக்திவேல் நாயக்கர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கமல் ஹாசனின் 234 ஆவது படமாகும். கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மணிரத்னத்தால் கமலின் 'தக் லைஃப்' படத்துக்கு கூடிய மவுசு! கோடிக்கணக்கில் பிஸினஸான டிஜிட்டல் உரிமம்!

34
Thug Life Movie:

 ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் தக் லைஃப் திரைப்படம்:

வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. Mani Ratnam - Kamal Haasan's 'Thug Life' new poster update அதில் கமல் ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் இடம் பெற்றுள்ளனர். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாக இருக்கிறது. இந்த பாடல் கல்யாண நிகழ்ச்சியின் போது கேங்ஸ்டர்களுடன் இணைந்து பாடப்படும் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

44
Jinguchaa Song release Tomorrow:

சிங்குச்சா பாடல் நாளை வெளியாகிறது:

இந்தப் பாடலுக்கு சிம்பு மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து குண்டர்கள் டான்ஸ் ஆடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இப்பாடல் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற தகவல் இன்று மாலையோ அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என தெரிகிறது.  கமல் - சிம்பு காம்போவில் வெளியாக உள்ள இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆளவிடுங்கடா சாமி" மாநாட்டிற்கு பின் மொத்தமா மாறிய சிம்பு - புதுசா எடுத்த ரெசலூஷன் என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories