கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'ஜெயிலர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது உத்தரகாண்டா, 45, பெட்டி, Bhairavana Kone Paata ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
25
Shivarajkumar Diagnosed Cancer last year:
கடந்த ஆண்டு சிவராஜ்குமாருக்கு புற்று நோய் கண்டறியப்பட்டது:
இந்த நிலையில் தான் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது இவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இதன் காரணமாக அமெரிக்காவில் 2 மாத தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை பிறகு உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள இவரது நிலையை கண்டு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரையில் பலரும் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது 45 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார் கமல்ஹாசன் பற்றி மிகவும் உருக்கமாக சில தகவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
45
Shivarajkumar Big Fan of Kamalhaasan
கமல் ஹாசனின் தீவிர ரசிகன்:
நான் கமல் ஹாசனின் தீவிர ரசிகன். அவரது படத்தை முதல் நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவேன். அந்தளவிற்கு அவரது மிகப்பெரிய ரசிகனாக நான் இருந்தேன். ஒரு நாள் என்னுடைய வீட்டிற்கு கமல் ஹாசன் வந்தார். அவர், எனது அப்பாவிடம் நான் யார் என்று கேட்டார். அவரைப் பார்த்து நான் கட்டியணைத்துக் கொண்டேன்.
அதன் பிறகு நான் 3 நாட்கள் குளிக்கவில்லை. அவர் தான் மிகச்சிறப்பான நடிகர். ரொம்பவே அழகு. இதுவே நான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரை தான் திருமணம் செய்திருப்பேன். அந்தளவிற்கு அவரது ரசிகனாக இருந்தேன். நான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது கூட கமல் ஹாசன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசியது தான் எனக்கு தைரியமாக இருந்தது. எனது நிலை குறித்து அறிந்து அவர் ரொம்பவே வருத்தப்பட்டார். அதோடு கண்கலங்கினார். நானும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.