நவம்பர் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்..! ஒரே நாளில் இத்தனையா? முழு விவரம்

Published : Nov 09, 2022, 04:22 PM IST

திரையரங்கில் வெளியான திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அந்த வகையில் வரும் நவம்பர் 11 ஆம் தேதி, ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் குறித்த முழு லிஸ்ட் இதோ...  

PREV
112
நவம்பர் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்..! ஒரே நாளில் இத்தனையா? முழு விவரம்

இந்த வாரம் கண்டிப்பாக, ஓடிடியில் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கார்த்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.. இது குறித்து முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இரவின் நிழல்:

நடிகர் பார்த்திபன், இயக்கி, தயாரித்து, நடித்திருந்த மிக முக்கியமான படம் 'இரவின் நிழல்'. கடந்த வாரமே இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் 1' வருகையால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. கடந்த வாரம் மிஸ் ஆனாலும், இந்த வாரம் மிஸ் ஆகாமல் ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. நான் லீனியர் ஷார்ட் படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில், நவம்பர் 11 ஆம் தேதி ரிலீசாகிறது.
 

212

ரோர்ஷாக்:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில், சைக்காலஜிக்கல் திரில்லராக... கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ரோர்ஷாக். காணாமல் போன தன்னுடைய மனைவியை ஹீரோ கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளை, விவரிக்கும் விதமாக இந்த படம் ஒரு திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

துணிவு படப்பிடிப்பில் டான்சருடன் நடிகர் அஜித்..! வைரலாகும் வீடியோ..!

312

குருசிஷ்யரு:

விளையாட்டு போட்டியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கன்னட திரை உலகில் கோ - கோ விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'குருசிஷ்ரு'. காமெடி, பரபரப்பு, காதல், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஜீ 5 ஓடிடி  தளத்தில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

412


மெய் ஹம் மூசா:

ஒரு ராணுவ வீரரை பற்றியும், அவர் பட்ட கஷ்டங்களை பற்றியும்  நேர்த்தியாக எடுக்கப்பட்டு பாராட்டுகளை குவித்த திரைப்படம் தான் மெய் ஹம் மூசா. பாகிஸ்தான் சிறைச்சாலையில் சுமார் 15 வருடங்களாக சிறை கைதியாக இருந்த ராணுவ வீரர் ஒருவர், தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் அவர் சந்திக்கும் சில பிரச்சனைகளை பற்றி பேசியது இந்த திரைப்படம். இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படம், நவம்பர் 11 ஆம் தேதி ஜீ - 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

512


பேட்டைக் காளி:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள வெப் தொடர் பேட்டைக் காளி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் 'ஆடுகளம்' கிஷோர் நடித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள உள்ள இந்த தொடர், ஆஹா ஓடிடி தளத்தில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தோடு மதம் மாறிய விஜய் பட நடிகர் சாய் தீனா ..! என்ன காரணம்..?

612

19ஆம் நூற்றாண்டு:

இந்த இந்த படத்தின் பெயரை கேட்கும் போதே, ஓரளவுக்கு ரசிகர்கள் இந்த படத்தின் கதையை யூகித்து விட முடியும். அதாவது 19ஆம் நூற்றாண்டு காலத்தை மையமாக வைத்தே இந்த மலையாள படம் உருவாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடும், கதாநாயகனின் போராட்டங்களையும், தியாகங்களையும், இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை... பரபரப்பான காட்சிகளுடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில், நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.
 

712

ப்ரீத் இன்டு தி ஷேடோஸ்:

கடந்த 2020 ஆம் ஆண்டு, வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடர் ப்ரீத் இன்டு தி ஷேடோஸ். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவான நிலையில், ப்ரீத் இன்டு தி ஷேடோஸ் 2, நவம்பர் 11ஆம் தேதி, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் நடிகர் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். கடத்தப்பட்ட குழந்தையை மீட்க போராடும் கதாநாயகனின் சவால் நிறைந்த போராட்டமே இந்த வெப் தொடர்.
 

812

ஃபாலிங் ஃபார் க்ரிஸ்மஸ்:

விபத்தில் சிக்கும் கதாநாயகிக்கு அம்னீஷியா நோயால் பாதிக்க படுகிறார். அனைத்து நினைவுகளையும் இழந்து தவிக்கும் நாயகி நினைவுகளை இழந்ததால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை உணர்வு பூர்வமாக கூறியுள்ள கதை தான் ஃபாலிங் ஃபார் க்ரிஸ்மஸ். இந்த படம் நவம்பர் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தலத்தில் வெளியாகிறது.

பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதும் வாரிசு vs துணிவு.. அதிக தியேட்டர் யாருக்கு ஒதுக்கப்படும்? - உதயநிதி ஓபன் டாக்
 

912

லாஸ்ட் புல்லட் 2:

லாஸ்ட் புல்லட் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ஒரு மெக்கானிக் வேலை செய்யும் கதாநாயகன், தன் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழியை நீக்குவதற்காக போராடும் கதை களம்தான் லாஸ்ட் புல்லட். முதல் பாகத்தில் , கரப்டட் காவல் அதிகாரிகளால் பலரை இழந்த, நாயகன் இரண்டாம் பாகத்தில் பழி உணர்ச்சியுடன் பலரை பழிவாங்க துடிக்கிறார். இந்த படம் நவம்பர் 11 ஆம் தேதி, நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
 

1012

வேர் த க்ராடேட்ஸ் சிங்:

மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள இந்த படம், கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் 4 மாதங்கள் கழித்து நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

1112

 

டோன்ட் லீவ்:

காதல் படங்களுக்கு எப்போது தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மனதை மயக்கும் அழகிய காதல் ஜோடிகளை பற்றியும், அவர்களுக்கும் வரும் சின்ன சின்ன பிரச்சனைகள் குறித்தும், மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் டோன்ட் லீவ். இந்த படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது.

ரூ.65 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை ஜான்வி கபூர்... அந்த வீட்டில் இத்தனை வசதிகளா...!

1212

டானவ்:

ஹிந்தியில், ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள டானவ் வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் நாயகனாக நடித்துள்ளார். அடிதடி, அனல் பறக்கும் சண்டை காட்சிகளை விரும்பும் ரசிகர்கள் இந்த வெப் சீரிஸை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

click me!

Recommended Stories