பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளும் ஒருவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர், சினிமாவில் தன் தாயைப் போல் சிறந்த நடிகையாக வலம் வர வேண்டும் என்கிற ஆசையுடன் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் மிலி என்கிற படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு ரூ.65 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வாங்கும் இரண்டாவது வீடு இதுவாகும். இந்த பங்களாவை தன் தந்தை போனி கபூர் மற்றும் தனது சகோதரி குஷி கபூர் ஆகியோருடன் இணைந்து வாங்கி உள்ளாராம் ஜான்வி கபூர்.
6 ஆயிரத்து 421 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டில் எழில்கொஞ்சும் அழகிய கார்டன் பகுதி மற்றும் பிரம்மாண்ட நீச்சல் குளமும் உள்ளதாம். இதுதவிர 5 கார்கள் வரை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு சவுகரியமான கார் பார்க்கிங் வசதியும் அந்த வீட்டில் உள்ளதாம். இந்த வீட்டின் ஒப்பந்தம் கடந்த மாதமே கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... குடும்பத்தோடு மதம் மாறிய விஜய் பட நடிகர் சாய் தீனா ..! என்ன காரணம்..?