விஜய் படத்துக்கே தண்ணிகாட்டிய தனுஷின் பொல்லாதவன்... ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக்வெட்டி கொண்டாடிய படக்குழு

First Published | Nov 9, 2022, 10:59 AM IST

பொல்லாதவன் படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் இணைந்து கேக்வெட்டி கொண்டாடி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் தனுஷ். இவர் இந்த அளவு தலைசிறந்த நடிகராக உயர்ந்து நிற்பதற்கு காரணம் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் தான். குறிப்பாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் ரிலீசான படங்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது.

இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் தனுஷும் வெற்றிமாறனும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதுதவிர அடுத்ததாக வட சென்னை இரண்டாம் பாகமும் இவர்கள் கூட்டணியில் விரைவில் தயாராக உள்ளது. 

Tap to resize

இந்த வெற்றிக்கூட்டணி முதன்முதலில் இணைந்து பணியாற்றிய பொல்லாதவன் படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இப்படம் கடந்த 2007-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் அழகிய தமிழ்மகன் படத்துக்கு போட்டியாக ரிலீசாகி வெற்றி கண்டது என்பது கூடுதல் சிறப்பு.

இதையும் படியுங்கள்... அடிக்க பாய்ந்த மணிகண்டன்... முழுசா சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

இந்நிலையில், பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகை திவ்யா ஸ்பந்தனா, தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் ஆகியோர் அப்படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை திவ்யா, தனுஷுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பரிந்துரை செய்ததே தனுஷ் தானாம். 

அதேபோல் வெற்றிமாறனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ள திவ்யா, ஜிவி பிரகாஷின் பின்னணி இசையை பாராட்டி உள்ளதோடு பொல்லாதவன் 2-ம் பாகத்திற்காக ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...  நானும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது... ட்ரோல் செய்தவர்களை வெளுத்துவாங்கிய ராஷ்மிகா

Latest Videos

click me!