கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளசுகள் மத்தியில் இப்படத்திற்கு வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் பிரதீப், லவ் டுடே வெற்றிக்கு நன்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வார நாட்களிலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் பெங்களூரு, கேரளா, மலேஷியா போன்ற இடங்களிலும் இதே நிலை இருக்கிறது.
இதையும் படியுங்கள்... லவ் டுடே வசூலில் பாதிகூட கிடைக்கல... பரிதாப நிலையில் ‘காஃபி வித் காதல்’ - 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி.
நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.