Actress Trisha : அடக்கடவுளே.. காலில் அடிபட்ட நிலையில் த்ரிஷா...புகைப்படத்தை பார்த்து பதறிய ரசிகர்கள்

First Published | Nov 8, 2022, 6:20 PM IST

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்னவாயிற்று? விரைவில் நீங்கள் குணமடைய வாழ்த்துக்கள் போன்ற கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வனில் குந்தவையாக வந்து பேன் இந்திய ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் திரிஷா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாகவே வலம் வருகிறார்.

முன்னதாக 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்த இவருக்கு மௌனம் பேசியதே படம் நல்ல அறிமுகத்தை கொடுக்க மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 என தொடர்ந்து இளம் ரசிகர்களை வசீகரித்த படங்களில் நடித்து பிரபலமானார் திரிஷா.


trisha

பின்னார் இவருக்கு தெலுங்கிலும் வாய்ப்பு கிடைக்க விஜய் உடன் கில்லி, சூர்யாவுடன் ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், பீமா உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து டாப் டென் நாயகிகளில் ஒருவராகி விட்டார்.

Trisha

கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் இவருக்கு மேலும் புகழை கூட்ட சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பாராட்டுகளை தன் கைவசம் ஆக்கினார்.

அரண்மனை 2 படத்திலும் பேய் பிடித்த பெண்ணாக வந்து மிரட்டி இருந்த இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ஜானுவாக வந்து இன்றைய - அன்றைய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே கூற வேண்டும்.

trisha

பின்னர் ரஜினிகாந்தின் பேட்டை பரமபத விளையாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் மிக முக்கிய கதாபாத்திரமான குந்தவை இவருக்காகவே படைக்கப்பட்டது போன்று பொருத்தமாகப் பதிய அனைத்து தரப்பு ரசிகர்களும் இவரை கொண்டாடினர். 

தற்போது இவர் நடிப்பில் சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன் 2, சாலை உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிஸியாக இருக்கும் திருஷா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

trisha

அதாவது காலில் வீக்கத்துடன் காணப்படும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் த்ரிஷா. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்னவாயிற்று? விரைவில் நீங்கள் குணமடைய வாழ்த்துக்கள் போன்ற கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

Latest Videos

click me!