பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜனனி. இவர் தமிழில் தெகிடி, அவன் இவன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த பட வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பஹீரா, யாக்கை திரி, முன்னறிவான் ஆகிய படங்கள் உள்ளன. அதில் பஹீரா படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார் ஜனனி.