அந்த பதிவுக்கு பின்னர் நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிவந்த செய்திகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறி சமீபத்திய நேர்காணலில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதில் அவர் பேசியதாவது : “இந்த காலகட்டத்தில் என்னுடைய சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருந்தன. ஆனால் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்துவிட்டேன் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
ஆனால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் என்னுடைய உடல்நிலை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. நான் இன்னும் சாகவில்லை. அதுபோன்ற செய்திகள் தேவையற்றது” என தன்னைப்பற்றிய நெகடிவிட்டி குறித்து பேசி அந்த நேர்காணலில் சமந்தா கண்கலங்கியதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த ஷிவானி... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்