Aparna Balamurali : போட்டோ சூட்டுகள் மூலம் தன்னை நிரூபிக்கும் அபர்ணா பாலமுரளி.. நியூ லுக் இதோ

First Published | Nov 8, 2022, 2:03 PM IST

விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்று இருந்தது.

Aparna Balamurali

மலையாள படங்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தவர் அபர்ணா பாலமுரளி. அங்கு பல சூப்பர் ஹிட் படங்களில் தோன்றியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் என்னும் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆனார் அபர்ன பாலமுரளி. மீண்டும் மலையாளத்தில் சில படங்களில் தோன்றினார்.

Aparna Balamurali

பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வம் தாள மயம் என்னும் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த சூரரை போற்றுப் படம் பல பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.


Aparna Balamurali

சுதா கொங்கார இயக்கத்தின் வெளியான இந்தப் படம் சிம்ப்ளி ஃபிளை நிறுவனரான ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த படம்.  சமீபத்தில் ஐந்து தேசிய விருதுகளை தன் கைவசம் ஆக்கியது சூரரைப் போற்று.

Aparna Balamurali

படத்தில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. 

Aparna Balamurali

இதைத்தொடர்ந்தே அபர்ணாவுக்கு  அதிக படங்களில் ஒப்பந்தமாகும் வாய்ப்பு கிடைத்ததென்றே கூறலாம். அதன்படி தீதும் நன்றும், வீட்டில விசேஷம், சுந்தரி கார்டன், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Aparna Balamurali

தற்போது தூமம், உலா, பத்மினி, காமா, 2018 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அபர்ணா. முன்னதாக இவரது உடல் எடை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு உடலழகு தேவையில்லை திறமை தான் முக்கியம், பலரும் அழகை பார்த்து தான் வாய்ப்பு அளிக்கிறார்கள் என பகிர் புகாரை முன் வைத்திருந்தார் அபர்ணா முரளி.

Aparna Balamurali

இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான போட்டோ சூட்டுகளையும் நடத்த ஆரம்பித்துவிட்டார் அபர்ணா. விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் வெள்ளை நிற உடையில் இவர் வெளியேற்றுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

Latest Videos

click me!