தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஷிவானி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஷிவானி நடிப்பில் முதலில் ரிலீசான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி. இப்படத்தில் அவர் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அதற்கு தியேட்டர்களில் விசில் பறந்தது. அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.
இதுதவிர விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கவர்ச்சி வேடத்திலும் நடித்திலும் நடித்துள்ள ஷிவானிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார் ஷிவானி.