பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீசான தோனி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.
பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக குமுதவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.
இவ்வாறு தமிழில் அவ்வப்போது நடித்தாலும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்த நடிகை ராதிகா ஆப்தே, சமீப காலமாக பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.