நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு மிகவும் சக்சஸ்புல்லான ஒன்றாக அமைந்துள்ளது. அவரது கெரியரிலும் இது மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
முதலில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் கார்த்தி நடித்த விருமன் படம் ரிலீஸ் ஆனது. முத்தையா இயக்கிய இப்படத்தில் கிராமத்து நாயகனாக கலக்கி இருந்தார் கார்த்தி. சூர்யா தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 60 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையடுத்து செப்டம்பர் மாதம் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசானது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்தி அசத்தி இருந்தார் கார்த்தி. இப்படமும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. ராஜு முருகன் இயக்கும் இப்படத்திற்கு ஜப்பான் என பெயரிடப்பட்டு உள்ளது.
நடிகர் கார்த்தியின் 25-வது படமான இதில், அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ஹீரோயின் அனு இமானுவேல் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். புஷ்பா பட வில்லன் சுனில் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.