தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், தான் ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டிருப்பதாவது : “கடந்த சில மாதங்களாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன். ஏனெனில் நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.. இதனை நான் சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் ஆனால் சற்று தாமதமாகிவிட்டது.