விஜய் நடித்துள்ள வாரிசு படமும் அஜித் நடித்துள்ள துணிவு படமும் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. இந்த இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதில் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும், துணிவு படத்தை எச்.வினோத்தும் இயக்கி உள்ளனர்.
அதேபோல் துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி சில்லா சில்லா எனப் பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை அனிருத் பாடி உள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க இரண்டு படங்களில் எந்த படத்துக்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
குறிப்பாக துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதால் இப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், உதயநிதி சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசி உள்ளார். அப்போது இரண்டு படங்களுக்குமே சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார். இதன்மூலம் துணிவு படத்துக்கு தான் அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்கிற சர்ச்சைக்கு முடிவுகட்டி உள்ளார் உதயநிதி.
இதையும் படியுங்கள்... அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி... பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி உதை..!