நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளதால், அஜித் ரசிகர்களின் ஆதரவும் விஜய்க்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் ஆதரவு யாருக்கு என்பது பற்றிய அதிர்ச்சி சர்வே வெளியாகி உள்ளது.
சினிமாவில் பெயரும், புகழும் கிடைத்துவிட்டால், ஹீரோக்களின் அடுத்த டார்கெட் அரசியல் தான். எம்ஜிஆர், விஜயகாந்த் தொடங்கி விஜய் வரை இதே ரூட்டை தான் பல நடிகர்கள் பாலோ பண்ணி வருகிறார்கள். இதில் வெற்றிபெற்றவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் - அஜித், இருவருக்குமே மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அதைப்பயன்படுத்தி அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம், என்கிற அரசியல் கட்சியையும் தொடங்கி, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.
24
எலெக்ஷன் சர்வே
விஜய் அரசியலுக்கு வந்தாலும், அவருக்கு இணையான ரசிகர் படையை கொண்டிருக்கும் அஜித், அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என விலகியே இருக்கிறார். அஜித் தற்போது முழுவதுமாக கார் ரேஸில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அவர் அரசியலில் தலைகாட்டாவிட்டாலும் அவரை வைத்து இங்கு அரசியல் நடக்கும். அவரது ரசிகர்களின் வாக்குகளை பெற திமுக, அதிமுக, நாதக என பல கட்சிகள் போட்டிபோடுவது உண்டு. 2026 தேர்தலில் அஜித் ரசிகர்களின் சப்போர்ட் யாருக்கு இருக்கும் என்கிற ஷாக்கிங் சர்வே ஒன்று வெளியாகி உள்ளது.
34
அஜித் ரசிகர்கள் ஓட்டு யாருக்கு?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சர்வே ரிப்போர்ட்டில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் 80 சதவீதம் அதிமுக-விற்கு தான் சப்போர்ட் பண்ணுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர திமுக-விற்கு 10 சதவீதம் பேரும், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றிற்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு அளிப்பார்கள் என அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த லிஸ்ட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெறவில்லை. இதனால் தவெக-விற்கு அஜித் ரசிகர்களின் சப்போர்ட் இருக்காது எனக்கூறி இந்த சர்வே ரிப்போர்ட்டை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஒரு சிலரோ இது போலியானதாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். விஜய்யும், அஜித்தும் நெருங்கிய நண்பர்கள், சொல்லப்போனால் அஜித்தே விஜய்க்கு தான் வாக்களிப்பார். அப்படி இருக்கையில், அவரது கட்சியை அஜித் ரசிகர்கள் கைவிடுவார்களா என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மறுபுறம் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருக்கு அஜித் மீது தனி பாசம் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல் கலைஞர் அமர்ந்திருந்த மேடையிலேயே அவரை எதிர்த்து பேசி அதிர வைத்தவர் அஜித். அதனால் அவரது ரசிகர்கள் திமுக பக்கம் செல்ல பெரியளவில் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.