எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புலிகேசியிடம் இருந்து தப்பித்து தர்ஷன் திருமணத்தை தடுக்க வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில் அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கப்போகிறது என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த புரோமோவில் தர்ஷன் அன்புக்கரசி கழுத்தில் தாலிகட்ட சென்ற நிலையில், அதை போலீஸ் உடன் வந்து ஜனனி தடுத்து நிறுத்திய காட்சிகள் இடம்பெற்று இருந்தது. அறிவுக்கரசி, கேமராமேனை கொலை செய்ததை சுட்டிக் காட்டி இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருந்தார் ஜனனி.
24
போலீஸிடம் சிக்கும் ஜனனி
ஆனால் ஜனனிக்கு அந்த கேமராமேன் கொலை செய்யப்பட்ட விவகாரம் எப்படி தெரிந்தது என்பது தான் புரியாத புதிராக இருந்தது. அதற்கு இன்றைய எபிசோடில் விடைகிடைத்துள்ளது. அதன்படி தர்ஷன் திருமணத்தை தடுத்து நிறுத்த ஜீவானந்தம் மற்றும் பார்கவி உடன் காரில் மதுரைக்கு வந்துகொண்டிருந்த ஜனனி, இடையே போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறார். ஏற்கனவே புலிகேசி கேங்கிடம் இருந்து தப்பித்து சென்ற அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து அவர்களது காரில் சோதனை செய்ய வேண்டும் என கூறுகின்றனர். அப்போது ஜனனி எதற்காக காரில் சோதனை செய்கிறீர்கள் என கேட்கிறார்.
34
போலீஸ் மூலம் ஜனனிக்கு தெரியவரும் உண்மை
அப்போது தான் கேமராமேன் கெவினின் உடல் கைப்பற்றப்பட்ட விஷயத்தை கூறி இருக்கிறார்கள். ஜனனிக்கு கெவின் தான் தர்ஷன் திருமணத்தில் கேமராமேனாக இருந்தார் என்கிற விஷயம் தெரியும் என்பதால், அவரை அறிவுக்கரசி தீர்த்து கட்டியிருக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறி, அவர்களை மண்டபத்துக்கு அழைத்து செல்கிறார் ஜனனி. அங்கு சென்ற பின்னர் தான் கெவின் கொலை செய்யப்பட்டது தெரியவந்து அறிவுக்கரசியை போலீஸ் கைது செய்திருக்கிறது. தர்ஷன் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தவித்த ஜனனிக்கு போலீஸ் மூலமே ஒரு ஹிண்ட் கிடைத்திருக்கிறது.
தர்ஷன் திருமணத்தை வெற்றிகரமாக ஜனனி தடுத்து நிறுத்தியதோடு மட்டுமின்றி, ஆதி குணசேகரனுக்கு எதிரான இறுதி யுத்தத்திலும் ஜெயித்திருக்கிறார். இதையடுத்து தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடந்ததா? அறிவுக்கரசியை போலீஸ் கைது செய்த நிலையில், ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்பதை ஜீவானந்தம் நிரூபித்தாரா? கெவினிடம் இருந்த வீடியோ ஆதாரம், வெளிவந்ததா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.