Published : Oct 05, 2025, 03:21 PM ISTUpdated : Oct 05, 2025, 03:38 PM IST
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிலையில் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒட்டு மொத்த ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ஒரு தருணம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஆம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில் எத்தனை போட்டியாளர்கள் இடம் பெறுவார்கள், யார் யார் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு ரசிகளிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட இவர்கள் தான் செல்வார்கள் என்ற ஒரு யூகத்திற்கு அனைவருமே வந்துவிட்டோம்.
26
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9
இந்த சூழலில் தான் ஒவ்வொரு வருடமும் புதுப்புது வசதிகளுடன் பிக்பாஸ் தமிழ் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பிக்பாக்ஸ் 9ஆவது சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான புரோமோ வீடியோ ஏற்கனவே வெளியானது. அதில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதி உடன் வந்தவரிடம் இது என்ன சார் என்று கேட்கிறார். அதற்கு அவரோ ஜக்குசி என்கிறார். அப்படி என்றால் பாத் டப்.
36
விஜய் சேதுபதி
பெட்ரூமுக்குள்ளாகவே பாத் டப் வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கண்டெண்ட்டுக்கு கணக்கே இருக்காது என்று தெரிகிறது. மேலும், பார்க்க சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு ஏன், பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக இருபுறம் குதிரை போன்ற உருவம் இருக்கிறது. மேலும், வீட்டிற்குள் கிச்சன் செட்டப்பில் வித்தியாசம் இருக்கிறது. Confession ரூமில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உட்கார்ந்தால் பார்ப்பவர்களுக்கு பறவை போன்ற ஒரு தோற்றம் வரும். பிக்பாஸ் கஃபே ஏரியாவிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தனியாக கார்டன் ஏரியாவில் ஷோபா போட்டு லைட் செட்டப் உடன் தென்னை மரம் போன்ற செட்டப் பார்க்கவே அழகாக இருக்கிறது. இப்படி நிறைய மாற்றங்களுடன் இந்த 9ஆவது சீசனுக்கான பிக் பாஸ் பிரம்மாண்டமாக இன்று மாலை தொடங்குகிறது.
56
பிக் பாஸ் தமிழ் சீசன் 9
கடந்த 8ஆவது சீசனை முதல் முறையாக தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி மீது விமர்சனம் எழுந்த நிலையில் அதனை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார். இப்போது 2ஆவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் கரூர் சம்பவம் குறித்து விஜய் சேதுபதி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இருந்ததை விட இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. பிக் பாஸ் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவும், மாற்றங்களுடனும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறை ஒளிபரப்பு செய்யப்படும் போது ஏதாவது ஒரு தீம் இருக்கும். உதாரணத்திற்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது போன்று இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும் என்ற தீம் வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த சீசனின் டேக்லைன் “ஒண்ணுமே புரியல” என்பதாகும். இன்னும் 3 மணி நேரங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் புதிய புதிய புரோமோ வீடியோக்களை விஜய் டெலிவிஷன் வெளியிட்டு வருகிறது.