
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரவாரமே இல்லாமல் தொடங்கப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அதைப்பற்றிய பேச்சுக்களும் புரோமோக்களும் ஒளிபரப்பாக தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு அந்நிகழ்ச்சி தொடங்க ஒரு நாள் இருந்தாலும், அதற்கான எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை. நிகழ்ச்சி தான் ஹைப் இல்லாமல் தொடங்கப்போகிறது என்று பார்த்தால், அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் பட்டியலும் பெரியளவில் ஈர்க்கும்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.
விஜே பார்வதி, இவர் ஒரு குட்டி வனிதா என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் சர்வைவர் நிகழ்ச்சி, அதில் சண்டைக்கோழியாக வலம் வந்தவர் தான் பார்வதி. அதனால் பிக் பாஸுக்கு அளவெடுத்து செய்த போட்டியாளராக இவர் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இவரும் இந்த ஆண்டு பிக் பாஸில் கலந்துகொண்டுள்ளார்
திவாகர் என்று சொன்னால் தெரியாது... வாட்டர்மிலன் ஸ்டார் என்று சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர், மதுரையை பூர்வீகமாக கொண்ட திவாகர், சோசியல் மீடியாவில் கோமாளித்தனமான வீடியோக்கள் மூலம் பிரபலமானார், கடந்த சில மாதங்களுக்கு முன் அதே சோசியல் மீடியாவில் கடும் ட்ரோல்களையும் சந்தித்து இருந்தார்.
கெமி, இவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே-வாக பணியாற்றியவர். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு அசத்திய கெமி, சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சிங்கிள் பசங்க ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். இவரும் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பாஸில் வழக்கமாக மாடல்கள் சிலர் கலந்துகொள்வதுண்டு, அப்படி ஒருவர் தான் ரேம்போ. பார்க்க செம ஸ்மார்ட் ஆக இருக்கும் இவர், இந்த ஆண்டு பல இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நன்றாக விளையாடினால், ஆரவ், பாலாஜி முருகதாஸ் போன்று இவரும் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது.
கம்ருதீன் என்று சொன்னால் நிறைய பேருக்கு தெரியாது. மகாநதி குமரன் என்று சொன்னால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரும் இந்த ஆண்டு பிக் பாஸில் கலந்துகொள்ள உள்ளார்.
ரம்யா ஜோ, இவரும் சோசியல் மீடியா பிரபலம் தான். இவர் ஒரு நடனக் கலைஞர். ஊர் திருவிழாக்களில் டான்ஸ் ஆடி வந்த ரம்யா ஜோ, இன்ஸ்டாகிராம் மூலம் பேமஸ் ஆனார். இவரும் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
ஆதிரை செளந்தர்ராஜன், இவரும் விஜய் டிவி புராடெக்ட் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் யமுனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார். இதுதவிர விஜய்யின் பிகில் படத்திலும் நடித்திருந்தார். இவர் மகாநதி சீரியலை விட்டு சமீபத்தில் விலகிய நிலையில், தற்போது பிக் பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜனனி அசோக் குமார் ஒரு சீரியல் நடிகை இவர் நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மாப்பிள்ளை, இதயம் போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் உள்ளனர். பிக் பாஸ் எண்ட்ரி மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக ஜனனி மாற வாய்ப்பு இருக்கிறது.
ஷோபனா, இவரும் ஒரு தொகுப்பாளினி தான். யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஷோபனா, பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை பேட்டி எடுத்திருக்கிறார். இவரும் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளாராம்.
விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் வினோத் பாபு. இதையடுத்து விஜய் டிவியின் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அந்த சீரியலில் நாயகியாக நடித்த ஜனனி கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு அந்த சீரியலின் ஹீரோவான வினோத் பாபு பிக் பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அப்சரா சிஜே, இவர் ஒரு திருநங்கை. இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே களமிறங்கி இருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த சீசனில் புதுமுகங்களில் ஒருவராக அப்சரா களமிறங்குகிறார்.
பிரவீன் காந்தி, இவர் ஒரு திரைப்பட இயக்குனர். நாகார்ஜுனா நடித்த ரட்சகன், பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி. இவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.
மாடல் அழகியான வியானா, பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உடன் இந்த ஆண்டு களமிறங்கி இருக்கிறார். ரைசா வில்சன் போன்ற மாடல் அழகிகள் பிக் பாஸ் மூலம் ஜொலித்த நிலையில், அவரைப் போன்ற புகழை வியானா பெறுவாரா என்பதை பார்க்கலாம்.
மாலினி ஜீவரத்னம், இவர் ஒரு ஆவணப்பட இயக்குனர். இவரது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி. LGBTQ+ சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த ஆவணப்படம் எடுத்து பரவலாக பேசப்பட்டவர், தற்போது பிக் பாஸிலும் எண்ட்ரி கொடுத்துள்ளதால், கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரியும் விஜய் டிவி புராடெக்ட் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் நாயகனாக நடித்து பேமஸ் ஆனார். அந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த நிலையில், அவர் பிக் பாஸுக்குள் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அரோரா என்று சொன்னால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பலூன் அக்கா என்று சொன்னால் இளசுகள் ஜொல்லு விடுவார்கள். அந்த அளவுக்கு கிளாமர் குயினாக பிரபலமானவர் அரோரா. இவருக்கு இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவரும் பிக் பாஸுக்கு சென்றுள்ளதால், ரசிகர் கூட்டம் ஆர்மியாக மாற வாய்ப்புள்ளது.
கொங்கு மஞ்சுநாதன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட. கோவையை பூர்வீகமாக கொண்ட இவர், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதால், கொங்குத் தமிழ் மணக்க பேசும் மஞ்சுநாதனின் பிக் பாஸ் வரவு எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.