பாவாடைய விடுங்க... பிக் பாஸ் வீட்டில் திவாகர் செய்த கிறுக்குத்தனத்தால் பதறிய பார்வதி..!

Published : Oct 06, 2025, 08:50 AM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், உள்ளே சென்ற முதல் நாளே தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்திருக்கிறார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்.

PREV
14
Bigg Boss Diwakar vs VJ Parvathy

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்த், சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்‌ஷா, கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

24
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் முதல் ஆளாக வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தான். இவர் உள்ளே வந்ததும் தன்னுடைய கோமாளித்தனத்தை ஆரம்பித்துவிட்டார். அங்கு வந்திருந்த அனைவரிடமும் சென்று தன்னைப் பற்றி தற்பெருமை பேசி வந்தார் திவாகர். குறிப்பாக பிரவீன் காந்தியிடம் சென்று, இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம், ஆர்ஜே, விஜே, ஆக்டர்ஸ், ஆனால் நான் ஒரே வருடத்தில் அவர்கள் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டேன் என பிளேடு போட தொடங்கினார். இதனால் உஷாரான பிரவீன் காந்தி, அங்கிருந்து நைஸாக நழுவிச் சென்றுவிட்டார். அதுகுறித்த வீடியோ மீம் ஆக உருவாக்கிய நெட்டிசன்கள், பிரச்சனையை பார்த்தால் இப்படி தான் எஸ்கேப் ஆக வேண்டும் என கூறி வருகின்றனர்.

34
அரோராவிடம் ஜொல்லுவிட்ட திவாகர்

அதேபோல் இன்ஸ்டா பிரபலமான அரோரா தான் இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அவரைப் பார்த்ததும், உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு என வழிந்து பேசத் தொடங்கிவிட்டார் திவாகர். அப்போது அங்கிருந்த மற்றொரு போட்டியாளரான எஃப்.ஜே, அந்த பொண்ணுக்கு உன்னோட பேத்தி வயசு ஆகுதுயா என சொல்லி செம பல்பு கொடுத்தார். இந்த வீடியோ கிளிப்பை இணையத்தில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என கூறி திவாகரை கலாய்த்து வருகிறார்கள்.

44
திவாகரால் டென்ஷன் ஆன பார்வதி

தன்னைத் தானே நடிப்பு அரக்கன் என சொல்லிக் கொள்ளும் திவாகர், பிக் பாஸ் வீட்டிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறேன் என கூறி, கர்ணன் படத்தில் வரும் சிவாஜி கணேசனை போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பார்வதியின் பாவடையில் திவாகர் மிதித்துவிட, அவர் பாவாடைய விடுங்க என சற்று டென்ஷன் ஆகிவிட்டார். இப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல் நாளே தன்னுடைய கிறுக்குத்தனமான செயல்களை செய்யத் தொடங்கி உள்ளதால், இன்னும் என்னென்னலாம் பண்ண போறாரோ என பதறிப் போய் உள்ளனர் ரசிகர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories