நடிகர் ரஜினிகாந்த்துக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். தற்போது 72 வயது ஆனபோதிலும் மக்கள் மத்தியில் ரஜினிக்கான மவுசு இன்னும் குறைந்தபாடு இல்லை. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது பிறந்தநாள் வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.