தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் வெளியாகும் படங்களை அங்கீகரிக்கும் வகையில் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது ஜெய் பீம் தான். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் டி.ஜே.ஞானவேல். இதில் நடிகர் சூர்யா பழங்குடியினருக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.