தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி உள்ளனர். இதில் ஐஸ்வர்யா கடந்த 2012-ம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதன்பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கினார்.
இவர்கள் இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதேபோல் கடந்த 2010- ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட சவுந்தர்யா, கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு வேத் என்ற ஆண்குழந்தையும் உள்ளது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சவுந்தர்யா.
இந்நிலையில், தற்போது விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சவுந்தர்யா. அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : கடவுளின் அபரிமிதமான அருளுடனும், எங்கள் பெற்றோரின் ஆசியுடனும் விசாகன், வேத் மற்றும் நான் வேதின் சகோதரனை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என பதிவிட்டுள்ள சவுந்தர்யா, செப்டம்பர் 11-ந் தேதி பிறந்த தன் குழந்தைக்கு வீர் என பெயர் சூட்டி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... மணிரத்னம் அழைத்தும் பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்... என்ன காரணம் தெரியுமா?