2022 ஆம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், இதில் நடிகை பூஜா ஹெக்டே பிங்க் நிற உடையில் அழகு பதுமையாய் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் இதோ...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும்... முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே சைமா விருது விழாவில் கலந்து கொண்டு, விருது பெற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
26
பூஜா ஹெக்டே 2022 ஆம் ஆண்டுக்கான யூத் ஐகோன் (female) என்கிற சைமா விருதையும், அதிகம் விரும்பப்பட்ட நடிகை என்கிற விருதையும் பெற்றுள்ளார்.
கொள்ளை அழகில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
66
இதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இவரது கைவசம் இரண்டு ஹிந்தி திரைப்படம் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.