சமீபத்தில் திரையரங்கிற்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவரது சிறுவயது தோழியாக இருந்து பின்னர் கிளைமாக்ஸில் நாயகனை திருமணம் செய்து கொள்ளும் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்க திரும்ப வைத்துள்ளார் நித்யா மேனன்.
28
Nithya menon
விஜய், சூர்யா, ராகவா லாரன்ஸ் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டதன் மூலம் மிகவும் அறியப்பட்ட நித்யா மேனன், மெர்சல் படத்தில் விஜய் உடன் நடித்திருந்தது மிகுந்த பாராட்டுகளை பெற்றிருந்தது. வெற்றிமாறனின் மனைவியாக வந்து இவர் பேசும் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இவர் இணைந்து ஓகே கண்மணி என்னும் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டார்.
48
Nithya menon
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மிக பிஸியாகிவிட்ட இவர் சமீபத்தில் தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலத்தில் நடித்திருந்தார். முன்னதாக சைக்கோ படத்தில் ஊனமுற்ற போலீஸ் அதிகாரியாக வந்து தனது அசாதாரண நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.
அதாவது மலையாளியாக பிறந்த போதிலும் வேலை காரணமாக கர்நாடகாவில் செட்டில் ஆகிவிட்ட தனது பெற்றோர்களுடன் வசித்து வந்த நித்யா மேனன் முதலில் கன்னட படத்தில் தான் அறிமுகமாகியுள்ளார். பின்னர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
78
nithya menon
அதோடு ஹாலிவுட் இயக்குனர் தபு லீடு ரோலில் நடித்த ஆங்கிலத் திரைப்படமான ஹனுமன் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். 1998 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் வீடியோ தான் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
88
nithya menon
2011 ஆம் ஆண்டு 180 மற்றும் வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் புகைப்படங்களில் மிகவும் அழகாக பப்ளியாக தோற்றமளிக்கிறார். இவரது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்.