தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய்க்கும், அஜித்துக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் எலியும், பூனையுமாகத் தான் இருந்து வருகின்றனர். இருதரப்பினரும் அடிக்கடி டுவிட்டரில் மோதிக்கொள்வது உண்டு. அந்த மோதல் தற்போது போஸ்டர் வரை சென்றுவிட்டது.