வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால்.. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு..!

First Published | Dec 26, 2022, 10:18 AM IST

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாரிசு. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இதையொட்டி கடந்த டிசம்பர் 24-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக இந்த விழா தொடங்கும் முன்னர் ஏராளமான ரசிகர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவமும் அரங்கேறின.

இதையும் படியுங்கள்... நெடுஞ்சாலையில் கையை விட்டு பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட TTF வாசன் - ஆக்‌ஷன் எடுக்குமா காவல்துறை?

Tap to resize

இவ்வாறு சில சலசலப்புகளுக்கு மத்தியில் இசை வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்து உள்ளதாகவும், இந்த சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு பின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாக நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கி உள்ளார். இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்துள்ளார். அவர் தயாரித்துள்ள முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீங்களா? எதிர்ப்புகள் வலுத்ததால் துணிவு டுவிட்டை நீக்கிய TANGEDCO

Latest Videos

click me!