இந்திய சினிமாவில் ‘ஐட்டம் சாங்’ என்கிற கான்சப்ட் பல வருடங்களாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஐட்டம் சாங் ஆடுவதற்கென பிரத்யேகமாக நடிகைகள் இருந்தார்கள். காலப்போக்கில் ஹீரோயின்களே அவ்வாறு ஆடத்தொடங்கினர். கமர்ஷியல் படத்தில் அனைத்து அம்சங்களும் இருந்தாலும், ஐட்டம் சாங் இல்லையென்றால் அப்படம் விலைபோகாது என்கிற நிலைமை தான் இன்றளவும் உள்ளது. சினிமாவில் கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் ரசிகர்களுக்கு பெப் ஏற்றும் விதமாக ஐட்டம் சாங் வைப்பது இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி முன்னணி நடிகையாக இருந்தும் ஐட்டம் சாங்கிற்கு ஆட்டம் போட்ட நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நயன்தாரா
நடிகை நயன்தாரா, சமீபகாலமாக கவர்ச்சியை தவிர்த்து வந்தாலும், அவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சி தூக்கலான வேடங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் நயன், அடுத்தபடியாக விஜய்யுடன் சிவகாசி மற்றும் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் லோக்கல் பாய்ஸ் பாடலில் தாவணியில் வந்து தர லோக்கலாக குத்தாட்டம் போட்டிருப்பார்.
சிம்ரன்
90-களில் கனவுக்கண்ணியாக வலம் வந்த நடிகை சிம்ரன், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயினாக உயர்ந்துவிட்டார். முன்னணி ஹீரோயின் ஆன பின்னர் கூட இவர் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். அதன்படி யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்டா பூபதி பாடலுக்கு விஜய் உடன் சேர்ந்து சிம்ரன் ஆடிய நடனம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
கிரண்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கிரண், ஹீரோயினாக நடிக்கும்போதே விஜய், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி பாப்புலர் ஆனார். திருமலை படத்தில் விஜய்யுடன் இவர் ஆடிய வாடியம்மா ஜக்கம்மா பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது.
சமந்தா
ஐட்டம் டான்ஸ் ஆடிய முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் லேட்டாக இணைந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்திருப்பவர் தான் சமந்தா. புஷ்பா படத்தில் இடம்பெறும் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அல்லு அர்ஜுன் உடன் சேர்ந்து கவர்ச்சி ததும்ப நடிகை சமந்தா போட்ட குத்தாட்டம் அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித்தந்தது.
அஞ்சலி
தமிழில் எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு போன்ற படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது கிளாமர் மோடுக்கு மாறி இருக்கிறார். இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
சாயிஷா
வனமகன், கஜினிகாந்த், டெடி, காப்பான் என குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன நடிகை சாயிஷா, நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் கர்ப்பமானதால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து சாயிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அவர் சிம்புவின் பத்து தல படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் கர்ப்பமா? சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த காஜல் அகர்வால்..! - காரணம் என்ன?