ஆதிபுருஷ் முதல் பொம்மை வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ

First Published | Jun 14, 2023, 12:59 PM IST

பிரபாஸின் ஆதிபுருஷ் முதல் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை வரை தமிழ் சினிமாவில் இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் பற்றிய விவரத்தை தற்போது பார்க்கலாம்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

ஆதிபுருஷ்

பிரபாஸ் நடிப்பில் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார்.

பொம்மை

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பொம்மை. இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகை சாந்தினி தமிழரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Tap to resize

எறும்பு

குணச்சித்திர நடிகர்களான ஜார்ஜ் மரியான், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் எறும்பு. சுரேஷ் குணசேகரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வர உள்ளது. இப்படத்தை மண்ட்ரூ ஜிவிஎஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... மீண்டும் கர்ப்பமா? சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த காஜல் அகர்வால்..! - காரணம் என்ன?

சார்லஸ் எண்டர்பிரைசஸ் 

சுபாஷ் லலிதா சுப்ரமணியம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் சார்லஸ் எண்டர்பிரைசஸ். ஊர்வசி, குரு சோமசுந்தரம், கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை அஜித் ஜாய் தயாரித்துள்ளார். இப்படமும் வருகிற ஜூன் 16-ந் தேதி திரைகாண உள்ளது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

தமிழ் சினிமாவில் இந்த வாரம் 4 திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி சாந்தனு நடித்த இராவண கோட்டம் திரைப்படம் ஜூன் 16-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடியிலும், ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா சோனி லிவ் ஓடிடியிலும், விஜய் ஆண்டனியின் தமிழரசன் ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... சண்டியர் முதல் காவல்காரன் வரை... டைட்டில் பிரச்சனையில் சிக்கி படாதபாடு பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!