தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் ஆரம்ப காலகட்டத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார். பின்னர் ஒரு கட்டத்தில் கதையின் நாயகியாக உருவெடுத்த நயன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் மாபெரும் வெற்றியும் கண்டார்.