இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு... கியூட்டாக கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி

First Published | Dec 25, 2022, 6:44 PM IST

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு அவர்களுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படத்தை கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு மறக்கமுடியாக ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை இந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதுமட்டுமின்றி திருமணமான நான்கே மாதத்தில் இந்த தம்பதி பெற்றோர் ஆகினர். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. வாடகைத்தாய் முறையில் இந்த குழந்தைகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். இதனால் டபுள் சந்தோஷத்தில் உள்ள அந்த ஜோடி, தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத கமல்ஹாசன்... கலங்கிப்போன ஹவுஸ்மேட்ஸ் - எமோஷனல் வீடியோ இதோ

Tap to resize

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு அவர்களுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருவரும் ஜோடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகை நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அஸ்வின் சரவணன் இயக்கிய இப்படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இதில் திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு..!

Latest Videos

click me!