நகைச்சுவை நடிகர் வடிவேலு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, படங்களில் நடிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த வடிவேலு மீதான ரெட் கார்டு கடந்த 2020-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
இதையடுத்து சினிமாவில் அவர் நடிக்க கமிட் ஆன படம் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் வடிவேலு. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இது வடிவேலுவின் கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக, தற்போது வடிவேலு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் இனி ஹீரோவாக நடிக்கப்போவதில்லை என்பது தானாம். இனி ஹீரோவாக நடிக்காமல் காமெடி வேடங்களில் மட்டும் கவனம் செலுத்த வடிவேலு முடிவு செய்துள்ளாராம். அவரின் இந்த முடிவு அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.