ராஷ்மிகா முதல் ரம்யா பாண்டியன் வரை... சினிமா நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ

First Published | Dec 25, 2022, 3:33 PM IST

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சினிமா நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட புகைப்படம்.

போட்டோஷூட் மூலம் பேமஸ் ஆன நடிகை ரம்யா பாண்டியன், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இது.

Tap to resize

கிறிஸ்துமஸ் மரம் அருகே மெழுகு பொம்மை போல் அழகாக போஸ் கொடுத்தபடி அமர்ந்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

கிறிஸ்துமஸ் என்றாலே சிகப்பு நிறம்தான் என்பதால அதை மையமாக வைத்து நடிகை ஷ்ரேயா சரண் நடத்தியுள்ள போட்டோஷூட் இது.

மலையாள நடிகை மாளவிகா மேனன் தனது வீட்டில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே போஸ் கொடுத்தபடி பதிவிட்ட புகைப்படம் இது.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தனது செல்ல நாய்க்குட்டி உடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் இது.

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், தனது காதலன் சாந்தனுவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

நடிகை ராய் லட்சுமி, கிறிஸ்துமஸ் தாத்தா போல் தலையில் தொப்பி உடன் அழகாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படம் இது.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமும் ஆன சனம் ஷெட்டி, கிறிஸ்துமஸ் மரம் அருகே எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!