இதைப்பார்த்து பதறிப்போன சீரியல் குழுவினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், நடிகை துனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நடிகை துனிஷா தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதம் எதுவும் எழுதிவைக்காததால், இச்சம்பவம் குறித்து அங்குள்ள சீரியல் குழுவினரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.