நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இணைந்து, ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு இவர்கள் தயாரிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இவர்கள் தயாரித்த படம் தான் கனெக்ட்.
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 22-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதையொட்டி பிரீமியர் ஷோ கடந்த வாரம் திரையிடப்பட்டது. இதில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக வந்து கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாடகி சின்மயி, நயன்தாரா பற்றிய வீடியோவை பதிவிட்டிருந்த தனியார் ஊடகம் ஒன்று, தரக்குறைவாக கமெண்ட் செய்பவர்களை விட்டுவிட்டு, அதுபற்றி தட்டிக்கேட்க வந்த தன்னை கமெண்ட் செய்யவிடாமல் தடுத்தது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
அதுமட்டுமின்றி நயன்தாராவை பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு செருப்படி பதில் கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளதாவது : “இது மாதிரி ஆண்களெல்லாம் தாய்ப்பால் குடித்து தான் வளர்ந்தார்களா இல்லையா என்பது ஆச்சர்யமாக உள்ளது. இதுபோன்ற ஆண்களுக்கு பெண் குழந்தை இருந்தால் என்ன ஆவது. மகன்கள் முன்பும், கணவன்மார்கள் முன்பும் மகள்களை அம்மாக்கள் துப்பட்டா அணியச் சொல்வது ஆச்சர்யமில்லை. தங்கள் மகளிடமோ அல்லது சகோதரிகளிடமோ கூட இதுபோன்ற ஆண்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதா என கடுமையாக சாடியுள்ளார் சின்மயி.
இதையும் படியுங்கள்... வாரிசு ஆடியோ லாஞ்சில் மறைமுகமாக தான் ஒரு அஜித் ரசிகர் என நிரூபித்த விஜய்... இதை கவனித்தீர்களா?