கவர்ச்சி புகைப்படங்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தா

First Published | Dec 25, 2022, 12:00 PM IST

கிறிஸ்துமஸ் தினமான இன்று, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

கோயம்புத்தூரை சேர்ந்த மாடல் அழகியான நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

இதையடுத்து புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

Tap to resize

இதுதவிர லாக்டவுன் சமயத்தில் சோசியல் மீடியாவில் வித விதமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர் வட்டத்தை பெரிதாக்கினார் தர்ஷா.

இதன்மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தர்ஷா.

இதையும் படியுங்கள்... வாரிசு ஆடியோ லாஞ்சில் மறைமுகமாக தான் ஒரு அஜித் ரசிகர் என நிரூபித்த விஜய்... இதை கவனித்தீர்களா?

இதையடுத்து தற்போது சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் தர்ஷா. இப்படம் வருகிற டிசம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் தர்ஷா குப்தா.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து தர்ஷா குப்தா போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.

தர்ஷாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!

Latest Videos

click me!