வாரிசு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, பிரபு, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஷியாம், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாரிசு படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினர். அந்த வகையில் வாரிசு படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்துள்ள நடிகர் ஷியாம் பேசுகையில், இப்படத்தின் மொத்த பட்ஜெட்டையும் வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்... ராஷ்மிகா முதல் ரம்யா பாண்டியன் வரை... சினிமா நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ
அந்த வகையில் வாரிசு படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் தவிர்த்து இதர செலவுகளுக்காக முதலில் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். ஆனால் இறுதியில் திட்டமிட்டதைவிட அதிகம் செலவாகிவிட்டதாக கூறிய ஷியாம், மொத்தம் 80 கோடி வரை செலவானதாக தெரிவித்தார். படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தயாரிப்பாளர் தில் ராஜு செலவு செய்ததாக ஷியாம் கூறினார்.