Navya Nair Fine For Having Jasmine Flower in Australia
நடிகை நவ்யா நாயர் மல்லிகைப் பூவால் சிக்கலில் சிக்கி இருக்கிறார். வெறும் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மல்லிகைப் பூச்சரத்தால் நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவில் ரூ.1.14 லட்சம் அபராதம் செலுத்தியுள்ளார். இல்லையெனில் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டிருக்கும். இது விசித்திரமாக இருந்தாலும் உண்மை. ஓணம் பண்டிகையைக் கொண்டாட ஆஸ்திரேலியா சென்ற நடிகை நவ்யா நாயர், அங்கு இதுபோல் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது. இதுகுறித்து நடிகை நவ்யா நாயர் விளக்கமளித்துள்ளார்.
24
கொச்சி விமான நிலையத்தில் தந்தை கொடுத்த மல்லிகைப் பூ
சமீபத்தில் நடிகை நவ்யா நாயர் ஓணம் பண்டிகையைக் கொண்டாட ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சென்றிருந்தார். விக்டோரியாவின் மலையாள சங்கம் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு நடிகை நவ்யா நாயரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. இதையடுத்து நவ்யா நாயர் கொச்சியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் ஏறுவதற்கு முன்பு நவ்யா நாயரின் தந்தை, ஓணம் பண்டிகைக்குச் செல்வதால் மல்லிகை சூடிச் செல்வது அவசியம் என்று கூறியுள்ளார். அதன்படி மல்லிகைப் பூவை நவ்யா நாயருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.
34
ஆஸ்திரேலியாவுக்கு மல்லிப்பூ கொண்டு சென்ற நவ்யா நாயர்
சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மல்லிகை சூடி கலந்துகொண்டால் நல்லது என்ற தந்தையின் அறிவுரைப்படி, தந்தை கொடுத்த மல்லிகைப் பூச்சரத்தை இரண்டாகப் பிரித்துள்ளார். காரணம், கொச்சியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமானம் இல்லை. அதனால் சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து விமானத்தை மாற வேண்டும். அதனால் நடிகை நவ்யா நாயர் மல்லிகைப் பூச்சரத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றை தலையில் சூடிக்கொண்டு மற்றொன்றை கைப்பையில் வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும்போது மற்றொரு மல்லிகைப் பூச்சரத்தை சூடிக் கொள்வதற்காக கைப்பையில் வைத்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்த நவ்யா நாயருக்கு சுங்க அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சி அளித்துள்ளனர். நவ்யா நாயரின் கைப்பையில் 15 செ.மீ. மல்லிகைப் பூ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சூடிக் கொள்வதற்காக வைத்திருந்த மல்லிகைப் பூவால் நவ்யாவுக்கு சிக்கல் அதிகரித்தது. ஆஸ்திரேலிய விதிமுறைகளின்படி, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எந்த வகையான பூக்கள், செடிகள், கொடிகள், இலைகளை எடுத்து வருவதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் அது விதிமீறலாகும். நடிகை நவ்யா நாயர் தனது பையில் மல்லிகைப் பூ இருப்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதனால் போலீசார் அபராதம் செலுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமுறைகளை மீறினால் அதிகபட்சமாக AUD 6,600 அதாவது இந்திய ரூபாயில் ரூ.1.14 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அபராதம் செலுத்த 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும். விதிமுறை குறித்து தெரியாததால் தான் ரூ.1.14 லட்சம் அபராதம் செலுத்தியதாகவும், இது ஒரு பாடம் என்றும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.