விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் தன்னுடைய நகைச்சுவை திறமையால், ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர் பாலா. இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அந்நிகழ்ச்சியில் இவரிடம் பல்பு வாங்காத போட்டியாளர்களே இல்லை. அனைவரையும் கலாய்த்து தள்ளுவார். சின்னத்திரையை தொடர்ந்து பாலாவுக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், காந்தி கண்ணாடி என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
24
பாலாவின் காந்தி கண்ணாடி
காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பாலா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். பாலா உடன் ஜோடியாக நடிக்க 50 ஹீரோயின்கள் மறுத்துவிட்ட நிலையில், 51வது நபராக வந்தவர் தான் நமீதா கிருஷ்ணமூர்த்தி. இப்படத்தை ஷெரிப் இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் சுமார் ரூ.2.7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 5ந் தேதி காந்தி கண்ணாடி படம் திரைக்கு வந்தது.
34
காந்தி கண்ணாடி பட வசூல்
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆனதால், காந்தி கண்ணாடி படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் பெரும்பாலான ஊர்களில் இப்படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இதனால் இப்படத்தில் வசூல் மிகவும் மந்தமாகவே இருந்து வந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளில் காந்தி கண்ணாடி திரைப்படம் ரூ.35 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது. பின்னர் இரண்டாவது நாளில் இப்படத்திற்கு ரூ.45 லட்சம் வசூல் கிடைத்தது. போகப் போக பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், ஞாயிற்றுக் கிழமை அன்று காந்தி கண்ணாடி படத்தின் வசூல் மேலும் அதிகரித்தது.
அதன்படி நேற்று காந்தி கண்ணாடி திரைப்படம் இந்தியாவில் ரூ.65 லட்சம் வசூலித்து இருந்தது. இதன் மூலம் மூன்று நாள் முடிவில் இந்திய அளவில் இப்படம் ரூ.1.45 கோடி வசூலித்து உள்ளது. உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ.3 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இதற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முதல் படத்திலேயே நடிகர் பாலாவுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தான் வெளியிட்டு உள்ளது.