சிறகடிக்க ஆசை சீரியல் முத்துவும் மீனாவும் கிரீஷை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்புவதாக ஸ்கூலில் அனுமதி கேட்கின்றனர். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் ஸ்கூலில் இருந்து எஸ்கேப் ஆகி முத்துவின் காரில் ஒளிந்துகொண்ட பின்னர் பல எதிர்பாரா சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. கிரீஷ் காரில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் பதறிப்போன முத்து அவனை மருத்துவமனையில் அனுமதிக்கிறான். பின்னர் அவன் கண்விழித்ததும், ஸ்கூலில் நடந்தவற்றை எல்லாம் கேட்டு தெரிந்துகொண்ட முத்து, ஸ்கூலுக்கு சென்று கிரீஷை தங்கள் வீட்டிலேயே பார்த்துக் கொள்வதற்காக அனுமதி கேட்கிறார். அதற்கு ஸ்கூல் பிரின்சிபல், இந்த முடிவை கிரீஷின் கார்டியன் தான் எடுக்க வேண்டும் என சொல்லிவிடுகிறார்.
24
கிரீஷை முத்து - மீனா உடன் அனுப்ப மறுக்கும் ரோகிணி
பின்னர் கிரீஷின் கார்டியனான ரோகிணியின் தோழி மகேஸ்வரியிடம் இதுபற்றி கேட்கப்படுகிறது. அவர் இதை நான் முடிவு பண்ண முடியாது. கிரீஷோட அம்மா தான் முடிவு செய்ய முடியும் என கூறுவதோடு, தான் அவங்களிடம் வீடியோ காலில் பேசிவிட்டு இதுகுறித்து முடிவை சொல்வதாக கூறி, கிரீஷை தன்னுடைய காருக்கு அழைத்து செல்கிறார். அங்கு இருக்கும் ரோகிணியிடம் உள்ளே நடந்ததை கூறுகிறார் மகேஸ்வரி. அப்போது அவர் முத்து - மீனா உடன் கிரீஷை அனுப்பினால் தான் மாட்டிக் கொள்வேன் என்கிற பயத்தில், அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். ஆனால் கிரீஷ், முத்துவிடம் தான் இருப்பேன் என அடம்பிடிக்கிறான்.
34
அம்மாவையே மிரட்டிய கிரீஷ்
இதனால் டென்ஷன் ஆன ரோகிணி, ஒழுங்கா நான் சொல்றத கேளு நீ மகேஸ்வரி ஆண்ட்டி வீட்ல தான் இருக்கனும் என சொல்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கிறான் கிரீஷ். உனக்கு கொழுப்பாகிடுச்சா, அப்புறம் நானும் எங்கயாவது போயிடுவேன்னு மிரட்டுகிறார் ரோகிணி. இதற்கெல்லாம் அசராத கிரீஷ், அப்போ நானும் எங்கயாவது காணாமல் போய்விடுவேன்னு பிளாக்மெயில் செய்கிறான். என்னடா என்னையே மிரட்டுறியா, நான் சொல்றத ஒழுங்கா கேளு கிரீஷ், நீ இந்த ஆண்ட்டி கூட தான் இருக்கனும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார். அதற்கு கிரீஷ், முடியாது, நான் முத்து அங்கிள் கூட தான் இருப்பேன், நீ எப்போ வந்து என்னை கூட்டிட்டு போறியோ அப்போ தான் நான் வருவேன்னு தடாலடியாக சொல்லிவிடுகிறான்.
பின்னர் வேறு வழியின்றி முத்து - மீனா உடன் கிரீஷை அனுப்பி வைக்கிறார்கள். மறுநாள், சீதா மூலமாக ஒரு சைக்கார்டிஸ்ட் மருத்துவரிடம் கிரீஷை அழைத்து செல்ல முத்துவும் மீனாவும் முடிவு செய்கிறார்கள். இதை அறிந்த ரோகிணியும் அந்த மருத்துவமனைக்கு சென்று, கிரீஷிடம், டாக்டர் என்ன கேட்டாலும் நான் தான் உன்னுடைய அம்மா என்கிற உண்மையை சொல்லக் கூடாது என சொல்கிறார். மறுபுறம் மீனா, கிரீஷிடம் டாக்டர் என்ன கேட்டாலும் உனக்கு என்ன தோணுதோ அதை சொல் என சொல்லி அனுப்பிகிறார். டாக்டரிடம் கிரீஷ் என்ன சொல்லப் போகிறான். ரோகிணி பற்றிய உண்மை வெளியே வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.