சொன்ன பேச்சை கேட்காத ராஜீக்கு இது தேவையா? இனி பாண்டியனின் ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்?

Published : Sep 07, 2025, 03:18 PM IST

Kathir Saves Raji in Pandian Stores 2 : குடும்பத்தில் மூத்தவர்களின் பேச்சைக் கேட்காமல் சென்னைக்குப் புறப்பட்டு சென்ற ராஜீ பாதியிலேயே வீடு திரும்பிய நிலையில் என்ன நடக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது சற்று காதலும், ஆக்‌ஷனும் கலந்த கலவையாக இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. தனது கணவரின் டிராவல்ஸ் வைக்கும் திட்டத்திற்கு பணம் தேவைப்படும் நிலையில் இந்த டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்டார். பாண்டியனும், கதிரும் ராஜீக்கு மறுப்பு தெரிவிக்க அதையும் மீறி சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

முதல் ரவுண்ட் என்ற பெயரில் தனியாக ஆட வைக்க அதில் நன்றாக ஆடிய போதிலும், நடுவர்கள் குற்றம் குறை சொல்ல, அடுத்த ரவுண்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் மீது உள்ள ஆசையில் ராஜீயை நடுவர்கள் தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து 2ஆவது ரவுண்டு டூயட் ரவுண்டு. இதில், ராஜீ மற்றொருவருடன் இணைந்து டான்ஸ் ஆட வேண்டும். ஆனால், ராஜீக்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை.

25

இதற்கிடையில் போட்டி நடுவர்களில் ஒருவர் இரவு மது அருந்திவிட்டு ராஜீ தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தார். ஆனால், ராஜீ அவரை உள்ளேயே விடவில்லை. இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோ வெளியானது. அதில், இந்த போட்டியில் விருப்பம் இல்லாத நிலையில் ராஜீ ஊருக்கே புறப்பட தயாரானார்.

35

ஆனால், நடுவர்கள் போட்டி முடியும் வரையில் ஊருக்கு புறப்பட்டுச் செல்லக் கூடாது என்று கண்டாயப்படுத்தி தனி அறையில் அடைத்து வைக்க முயற்சி செய்தனர். இந்த நிலையில் தான் கதிர் தனது மனைவியை காப்பாற்ற சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார். ஏற்கனவே கதிருக்கு தனது மனைவி ஆபத்தில் சிக்கியுள்ளார், இது போலியான போட்டி என்று அவருக்கு தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல், ராஜீயை காப்பாற்றவே சென்னைக்கு வந்துள்ளார்.

45

இதில் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து ராஜீ தங்கியிருந்த ரூம் கதவை உடைத்து நடுவர்களிடம் சண்டையிட்டு ராஜீயை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அப்போது உன்னை எனக்கு பிடிக்கும். அதனால் தான் நான் சென்னைக்கு புறப்பட்டு வந்தேன் என்று கதிர் காரில் புறப்பட்டுச் செல்லும் போது ராஜீயிடம் கூறுகிறார். இதைக் கேட்டு ராஜீ ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதோடு அந்த புரோமோ வீடியோ காட்சிகள் முடிகிறது.

55

இதற்கிடையில் பாண்டியன், கோமதி, சரவணன், தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. இதையெல்லாம் தாண்டி, இப்போது ராஜீ போட்டியில் பங்கேற்காமல் அவருக்கு இப்படியெல்லாம் பிரச்சனை நடந்தது பற்றி பாண்டியனுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியும், ஏற்கனவே நடுவர் ஒருவர் ராஜீயுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

அது ராஜீக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர் செல்ஃபி எடுத்தார். இப்போது ராஜீ போட்டியில் பங்கேற்காமல் சென்றது ஒரு காரணமாக இருந்தாலும், கதிர் நடுவர்களை தாக்கியது மற்றொரு காரணமாக சொல்லப்படும் நிலையில் அந்த செல்ஃபி புகைப்படம் நெட்டில் வெளியிடப்படும் என்று சூழல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories