கிரீஷ் விவகாரம்... முத்துவின் அதிரடி முடிவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Sep 06, 2025, 03:25 PM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை கண்டுபிடித்த முத்து, அவனை தன்னுடைய மாமியார் வீட்டிலேயே தங்க வைக்க முடிவு செய்கிறான்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து மீனாவின் வீட்டிற்கு அழைத்து வரும் முத்து அவனிடம் ஸ்கூலில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்துகொள்கிறார். இதையடுத்து மீனா உடன் கிரீஷின் ஸ்கூலுக்கு செல்கிறார் முத்து. இதைப்பார்த்த ரோகிணி, காரிலேயே ஒளிந்துகொள்கிறார். பின்னர் பிரின்சிபலை சந்திக்க செல்லும் முத்து - மீனா, அவரிடம் கிரீஷ் தங்களிடம் பத்திரமாக இருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விடும் பிரின்சிபல் கிரீஷின் கார்டியனுக்கு இந்த தகவலை தெரிவிக்க போன் போடுகிறார்.

24
ரோகிணியின் தோழி கொடுத்த ட்விஸ்ட்

பிரின்சிபல் கிரீஷின் கார்டியனான ரோகிணியின் தோழிக்கு போன் போட்டு, கிரீஷ் கிடைத்துவிட்டதாக கூறுகிறார். அதுமட்டுமின்றி அவரை உடனடியாக ஸ்கூலுக்கு வருமாறு அழைக்கிறார். இதையடுத்து ஸ்கூலுக்குள் கிளம்பும் தன்னுடைய தோழியிடம், ரோகிணி மாதிரி கிரீஷோட அம்மாவும் எனக்கு பிரெண்டு தான்னு சொல்லி சமாளிக்க சொல்கிறார். பின்னர் அவர் உள்ளே வந்ததும் அவரிடம் நீங்க ரோகிணியின் பிரெண்டு தான என கேட்கிறார் மீனா. நீங்க தான் கிரீஷோட கார்டியனா என மீனா கேட்டதும், ஆமா, கிரீஷோட கல்யாணியும் என்னோட பிரெண்டு தான் என சொல்கிறார் ரோகிணியின் தோழி.

34
வீட்டில் கிரீஷ் பற்றி உண்மையை உடைக்கும் முத்து

பின்னர் கிரீஷின் அம்மாவுக்கு போன் போட்டு அவனுடைய நிலைமையை பற்றி சொல்ல சொல்கிறார் மீனா. பின்னர் அவரும் ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார். அவரும் கிரீஷை மீண்டும் ஸ்கூல் சேர்த்துவிடுமாறு கூறுகிறார். இதையடுத்து வீட்டுக்கு செல்லும் முத்து - மீனா, வீட்டில் உள்ள விஜயா மற்றும் அண்ணாமலையிடம் கிரீஷ் கிடைத்த தகவலை சொல்லுகிறார்கள். இதைக்கேட்டதும் அவனை இங்க கூட்டிட்டு வந்துட்டீங்களா என ஷாக் ஆகிறார் விஜயா. அவனை இங்கெல்லாம் கூட்டிட்டு வரவில்லை, அவன் இங்கு வருவது உங்களுக்கு பிடிக்காதுல்ல அதனால் எங்க அம்மா வீட்டில விட்டுட்டு வந்திருக்கோம் என சொல்கிறார் மீனா.

44
கலக்கத்தில் ரோகிணி

ஊரில் ஒருமுறை தான் கிணற்றில் விழுந்தபோது கிரீஷ் தான் முத்துவை அழைத்து வந்து என்னை காப்பாற்றினான். அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன் என கூறுகிறார் மீனா. சின்ன வயசுலயே அம்மா பாசம் இல்லாம போன அந்த பசங்களோட நிலைமை என்ன ஆகும்னு எனக்கு தான் தெரியும் என ஃபீலிங்கோடு பேசும் முத்து, கிரீஷுக்கு பயம் போய், அவங்க அம்மா வர்ற வரைக்கும் அவனை மீனா அம்மா வீட்டிலேயே வச்சிக்கலாம்னு முடிவு பண்ணி இருப்பதாக சொல்கிறார் முத்து.

ஒருவேளை அவங்க அம்மா வராமலே போயிட்டா என்ன செய்வீர்கள் என ரோகிணி கேட்டதற்கு, கார்டியன் கிட்ட சொல்லி பேசுறாங்கல்ல நேர்ல வரமாட்டாங்களா. அந்த பொண்ணு இங்க வரணும் இல்லேனா தேடி கண்டுபிடிச்சு வர வைப்பேன் என தடாலடியாக கூறுகிறார் முத்து. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் ரோகிணி. இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories