டாக்டர் சொன்ன டாப் சீக்ரெட்; சக்தியிடம் கையும் களவுமாக சிக்கும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

Published : Sep 06, 2025, 11:12 AM IST

சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு என்ன ஆனது என்கிற உண்மையை சக்தியிடம் கூறி இருக்கிறார் டாக்டர். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய சக்தி, ஆதி குணசேகரனிடம் சொல்லி டாக்டரை வர வைக்கிறார். தர்ஷனை பரிசோதனை செய்த டாக்டர், தயவு செய்து யாரும் இவரை தொந்தரவு செய்யாதீர்கள் என சொல்கிறார். அவர் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். இவர் கூட யார் இருந்தால் நிம்மதியாக ஃபீல் பண்ணுவாரோ அவரை அருகில் இருக்க வைக்குமாறு டாக்டர் கூறுகிறார். உடனே குறுக்கிடும் அறிவுக்கரசி, அவரை கட்டிக்கப் போற பொண்ணு இருக்கா, அவ கூட இருந்தா தான அவருக்கு தோதாக இருக்கும் என சொல்கிறார்.

24
சக்தியுடன் இருக்க விரும்பும் தர்ஷன்

தொடர்ந்து பேசும் டாக்டர், நாம அப்படி நினைக்கலாம் மேடம், ஆனால் இவருடைய சவுகரியம் என்று ஒன்று இருக்கு, அதனால நீங்க சொல்லுங்க தர்ஷன் உங்களுக்கு யாருடன் இருந்தால் நன்றாக இருக்கும் என டாக்டர் கேட்டதும், நீண்ட நேரம் யோசித்து, சக்தி சித்தப்பா என்னுடன் இருக்க வேண்டும் என சொல்கிறார் தர்ஷன். இதைக்கேட்டு ஷாக் ஆன ஆதி குணசேகரன், என்ன விளையாடுறியா நீ.. அவன் கூட சேர்ந்து றெக்க கட்டி பறக்க போறியா, யோவ் டாக்டர் அவனுக்கு வைத்தியம் பார்க்க வந்தியா இல்ல யாரோடையாச்சும் சேர்த்துவிட வந்தீங்களா அவருக்கு காசை கொடுத்து அனுப்புங்கடா கிளம்பட்டும் என சொல்கிறார் குணசேகரன்.

34
டாக்டர் சொன்ன ஷாக்கிங் தகவல்

தர்ஷன் மன ரீதியாக பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக தான் இப்படி சொன்னதாக கூறுகிறார் டாக்டர். இதையடுத்து சக்தியிடம் தனியாக பேசும் டாக்டர், அவரிடம் ஒரு உண்மையை போட்டுடைக்கிறார். தர்ஷனுக்கு சப்பாட்டில் ஏதோ மருந்து கலந்து கொடுத்திருப்பதால் தான் அவருக்கு இப்படி ஆனதாக சொல்கிறார் டாக்டர். சுயமாக யோசிக்க கூடாது, வேகமாக செயல்படக் கூடாது அவரை மந்தமாக்குவதற்காக ஏதோ கலந்து கொடுத்திருக்கிறார்கள் என்கிற திடுக் தகவலை கூறுகிறார். இதைக்கேட்ட சக்தியும் ஷாக் ஆகிறார். பின்னர் அவரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் டாக்டர்.

44
புலிகேசியிடம் சிக்கினாரா ஜீவானந்தம்?

டாக்டர் சொன்னதைக் கேட்டதும், சக்திக்கு அறிவுக்கரசி மீது தான் சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் சக்தியிடம் அறிவுக்கரசி கையும் களவுமாக சிக்க அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம் புலிகேசி, கொடைக்கானல் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஜீவானந்தத்தை கண்டுபிடிக்க புது ரூட்டில் களமிறங்குகிறார். காட்டின் நடுவே உள்ள வீட்டை கண்காணிக்க ட்ரோன் ஒன்றை அனுப்புகிறார். அப்போது ஜீவானந்தம் மற்றும் பார்கவி வெளியே இருக்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? ஜீவானந்தமும், பார்கவியும் புலிகேசியிடம் சிக்கினார்களா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories