விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. டிஆர்பியிலும் விஜய் டிவி சீரியல்கள் வார வாரம் சன் டிவிக்கு டஃப் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியான டிஆர்பி பட்டியலில், சிறகடிக்க ஆசை சீரியல் தான் 8.02 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. இதற்கு அடுத்த படியாக அய்யனார் துணை சீரியல், 7.60 டிஆர்பி உடன் இரண்டாம் இடத்திலும், சின்ன மருமகள் சீரியல் 7.16 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தன. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. அதற்கு 6.01 டிஆர்பி கிடைத்துள்ளது.
24
விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி
பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் இந்த வாரம் 5.01 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சிந்து பைரவி சீரியல் 4.42 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. பிற்பகலில் ஒளிபரப்பாகும் பூங்காற்று திரும்புமா சீரியலுக்கு 3.03 டிஆர்பி கிடைத்து 7ம் இடத்தை பிடித்துள்ளது. 2.45 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் ரேஷ்மாவின் மகளே என் மருமகளே சீரியலும், 2.31 புள்ளிகளுடன் தென்றலே மெல்ல பேசு சீரியல் 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 10வது இடம் கண்மணி அன்புடன் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.
34
டிஆர்பியில் சொதப்பும் சீரியல்கள்
எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்யா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனம் சீரியல் வெறும் 2.09 டிஆர்பியை தான் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2.08 டிஆர்பி உடன் சக்திவேல் சீரியல் உள்ளது. விஜய் டிவி சீரியல்களிலேயே கடைசி இடத்தை பிடித்துள்ள சீரியல் என்றால் அது ஆஹா கல்யாணம் சீரியல் தான். இந்த சீரியலுக்கு வெறும் 1.89 டிஆர்பி ரேட்டிங் தான் கிடைத்துள்ளது. விஜய் டிவி தொடர்களிலேயே படுமோசமான டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ள சீரியல் என்றால் அது ஆஹா கல்யாணம் சீரியல் தான். இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், ஆஹா கல்யாணம் சீரியலை முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம். டிஆர்பியில் அதளபாதாளத்துக்கு சென்றதால் அந்த சீரியலை இழுத்து மூட முடிவெடுத்துள்ளனர். அந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் விக்ரம் ஸ்ரீ, காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, அக்ஷயா, விபிஷ், ராம், மவுனிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலுக்கு பதில் விரைவில் புத்தம் புது சீரியலை களமிறக்கவும் விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாம்.