முத்துவிடம் உண்மையை உளறிய கிரீஷ்... ஸ்கூலில் ரோகிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

Published : Sep 05, 2025, 12:32 PM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் தன் கார் டிக்கியில் மயங்கிக் கிடப்பதை கண்டுபிடித்த முத்து அடுத்து என்ன செய்தார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் ஸ்கூலில் இருந்து எஸ்கேப் ஆகி வந்து முத்துவின் கார் டிக்கியில் ஒளிந்து கொள்கிறான். இது தெரியாமல் கார் டிக்கியை மூடிவிட்டு, மீனாவின் வீட்டுக்கு செல்கிறார் முத்து. செல்லும் வழியில் மீனாவுக்கு போன் போடுகிறார் ரோகிணி. தான் ஒரு பிரைடல் மேக்கப்பிற்காக ஒரு இடத்திற்கு வந்ததாகவும் அங்கு பூ டெகரேஷன் செய்ய கொட்டேஷன் கேட்டதாக கூறு பேசுகையில், கிரீஷை பற்றி விசாரிக்கிறார். அவன் ஒருவருடன் காரில் செல்வதை தான் பார்த்ததாக கூறுகிறார். மீனாவும் தான் அவனை ஒரு முறை காரில் பார்த்தது பற்றி தெரிவிக்கிறார். இதன்மூலம் மீனாவிடம் கிரீஷ் இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறார் ரோகிணி.

24
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கிரீஷ்

இதையடுத்து மீனா தன் அம்மா வீட்டிற்கு சென்று அவரிடம் இருந்து பூவை வாங்கிவிட்டு கிளம்புகிறார். மீனா வீட்டிருந்து இருந்து எடுத்து வந்த பூ பையை கார் டிக்கியில் வைக்கும் போது அதில் கிரீஷ் மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் முத்து. அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்க்கிறார்கள். அப்போதும் கிரீஷ் எழவில்லை. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு கிரீஷை பரிசோதித்த டாக்டர், மூச்சு விட முடியாத இடத்தில் நீண்ட நேரம் இருந்ததால் மயங்கி இருக்கிறான் என கூறுகிறார். கண் விழிக்காமல் புலம்பிய கிரீஷிடம் சில கேள்விகளை கேட்கிறார் டாக்டர்.

34
பிரின்சிபலிடம் சண்டை போடும் ரோகிணியின் தோழி

பெயர் என்ன என கேட்டதும் கிரீஷ் என சொல்கிறார். அடுத்ததாக உன்னுடைய அம்மா பெயர் என்ன என கேட்கையில், கல்யாணி என சொல்கிறான் கிரீஷ், இதையடுத்து கண்விழித்த கிரீஷை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார் மீனா. அங்கு அவனிடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்கிறார் முத்து. கிரீஷும் ஸ்கூலில் இருந்து ஏன் ஓடி வந்தேன் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறான். மறுபுறம் ரோகிணியும் அவரது தோழியும் கிரீஷ் படிக்கும் ஸ்கூலுக்கு சென்று அங்குள்ள பிரின்சிபலிடம் சண்டைபோடுகிறார்கள். மகன் வரவில்லை என்றால் போலீசில் புகார் அளிப்போம் என எச்சரிக்கிறார்கள்.

44
முத்துவுக்கு தெரிய வரும் உண்மை

தயவு செய்து போலீசிடம் புகார் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரின்சிபல், கிரீஷ் கிடைத்ததும் உங்களுக்கு தகவல் கொடுக்கிறோம் என அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ஸ்கூலுக்கு கிரீஷ் உடன் செல்லும் முத்து - மீனா, குழந்தையை இப்படியா மிரட்டுவீங்க என பிரின்சிபலிடம் வாக்குவாதம் செய்கின்றனர். பின்னர் கிரீஷ் கிடைத்த தகவலை கார்டியனாக இருக்கும் ரோகிணியின் தோழியிடம் கூறுகிறார்கள். இதையடுத்து அவரும் பள்ளிக்கு வருகிறார். அங்கு அவரை பார்த்த முத்து - மீனா, இவர் ரோகிணியின் தோழி தான, இவரா கிரீஷோட கார்டியன் என ஷாக் ஆகிறார்கள். இதன் பின் என்ன ஆனது? கிரீஷின் அம்மா ரோகிணி என்கிற உண்மை உடைந்ததா என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories