கயல் சீரியலை அடிச்சு தூக்கிய எதிர்நீச்சல் 2... டிஆர்பி ரேஸில் டாப் 10 சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Published : Sep 04, 2025, 01:27 PM IST

டிஆர்பி ரேஸில் விஜய் டிவி சீரியல்களை அடிச்சுதூக்கி, சன் டிவி சீரியல்கள் மளமளவென முன்னேறி இருக்கின்றன. அதன் டாப் 10 பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
111
Top 10 Tamil serial TRP Rating

சீரியல்கள் என்றாலே முன்பெல்லாம் ஒரே டெம்பிளேட்டில் இருக்கும், அதன் காரணமாகவே சீரியல்களைக் கண்டால் ஆண்கள் தெறித்தோடுவார்கள். ஆனால் தற்போது சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்களும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரையில் தற்போது சன் டிவிக்கு நிகராக விறுவிறுப்பான சீரியல்களை ஒளிபரப்பி வருவது விஜய் டிவி தான். இதனால் வார வாரம் வெளியிடப்படும் டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த இரண்டு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 34-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது.

211
10. இராமாயணம்

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புராண கதையம்சம் கொண்ட தொடர் தான் இராமாயணம். அந்த தொடர் தற்போது கிளைமாக்ஸை எட்டி உள்ளதால் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் வார வாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் 6.40 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் 6.90 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த சீரியல் 10வது இடத்தில் உள்ளது.

311
9. சின்ன மருமகள்

விஜய் டிவியில் நவீன் மற்றும் ஸ்வேதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல், கடந்த வாரத்தை போல் இந்த வாரம் 9-ம் இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த வாரம் 7.02 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.16 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

411
8. அய்யனார் துணை

விஜய் டிவியின் டிரெண்டிங் சீரியலான அய்யனார் துணை, கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம், டிஆர்பி-யில் சற்று சரிவை சந்தித்தாலும் அதே 8-வது இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் 7.67 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த அய்யனார் துணை சீரியலுக்கு இந்த வாரம் 7.60 ரேட்டிங் மட்டுமே கிடைத்துள்ளது.

511
7. சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வரும் சிறகடிக்க ஆசை, இந்த வாரம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 8.37 டிஆர்பி புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு, 8.02 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறது.

611
6. அன்னம்

சன் டிவியின் அன்னம் சீரியல், இந்த வாரம் டிஆர்பி ரேஸில் முன்னேறி இருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 8.14 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளி 6-ம் இடத்துக்கு முன்னேறி இருப்பதோடு, 8.13 டிஆர்பி ரேட்டிங்கும் பெற்றுள்ளது.

711
5. மருமகள்

கேப்ரியல்லா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல், டாப் 10 டிஆர்பி ரேஸில் 5-ம் இடத்திலேயே நீடித்தாலும் அதன் டிஆர்பி ரேட்டிங் சரிவை சந்தித்து உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 8.50 டிஆர்பி கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் வெறும் 8.18 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.

811
4. கயல்

டிஆர்பி ரேஸில் சரிவை சந்தித்த மற்றொறு சன் டிவி சீரியல் தான் கயல். சைத்ரா ரெட்டி நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல், கடந்த வாரம் 9.12 புள்ளிகளுடன் கெத்தாக 3வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் அதன் டிஆர்பி ரேட்டிங் 8.68 புள்ளிகளாக சரிந்து 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

911
3. எதிர்நீச்சல் தொடர்கிறது

டிஆர்பி ரேஸில் கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிரைம் டைம் சீரியல், கடந்த வாரம் 8.66 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8.90 புள்ளிகளுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

1011
2. மூன்று முடிச்சு

சன் டிவியில் ஸ்வாதி கொண்டே நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புது சீரியல் மூன்று முடிச்சு. இந்த சீரியல், கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 2-ம் இடத்தை தக்கவைத்தது மட்டுமின்றி டிஆர்பியில் பிக் அப் ஆகி இருக்கிறது. கடந்த வாரம் 9.59 புள்ளிகளை பெற்ற இந்த சீரியல் இந்த வாரம் 9.63 ரேட்டிங்குடன் 2ம் இடத்தில் உள்ளது.

1111
1. சிங்கப்பெண்ணே

வழக்கம்போல் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்த சீரியல் முதலிடத்தில் இருந்தாலும் இதன் டிஆர்பி ரேட்டிங் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 10.29 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் வெறும் 9.77 புள்ளிகளை தான் பெற்றிருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories