ரோகிணியின் கதை காலி... மீண்டும் சீனுக்கு வந்த கிரீஷ்; முத்துவுக்கு தெரியவரும் உண்மை..! சிறகடிக்க ஆசை சீரியல்

Published : Sep 04, 2025, 08:49 AM IST

ஸ்கூலில் இருந்து எஸ்கேப் ஆகிவந்த கிரீஷ், தன் காரில் மயங்கிக் கிடப்பதை பார்த்துவிடுகிறார் முத்து, அதன் பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் ஸ்கூலை விட்டு வெளியே ஓடி வந்த நிலையில், அவனை துரத்தி வந்த அந்த ஸ்கூல் வாட்ச் மேன், வழியில் நின்றுகொண்டிருந்த முத்துவிடம், ஒரு சின்னப் பையன் ஓடி வந்தானே பார்த்தீங்களா என கேட்கிறார். அதற்கு இல்லை என சொல்லும் முத்து, என்ன ஆச்சு என்பதை கேட்கிறார். அந்த வாட்ச் மேன், நடந்ததை கூறுகிறார். அவனுக்கு ஒரு 9 வயசு இருக்கும் எனவும் சொல்கிறார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் முத்து. செல்லும் வழியில் மீனாவையும் பிக் அப் செய்துவிட்டு செல்கிறார். அப்போது ஸ்கூலில் ஒரு சிறுவன் காணாமல் போன விஷயத்தை கூறுகிறார் முத்து.

24
முத்துவின் காரை செக் பண்ண மறுக்கும் அருண்

செல்லும் வழியில் அருண் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார். அவனை பார்த்ததும், காலையில் தான் என்னால் சீதாவிடம் மாட்டினான். கண்டிப்பா நம்மளோட வண்டிய பார்த்தா சும்மா இருக்க மாட்டான். எதாவது பிரச்சனை பண்ணுவான். அது என்னவோ தெரியல, நான் போற வழியெல்லாம் எங்க பார்த்தாலும் இவன் நின்னுகிட்டு இருக்கான் என மீனாவிடம் புலம்புகிறார் முத்து. அப்போது காரை போலீஸ் செக் பண்ண வரும்போது, அது முத்துவின் கார் என தெரிந்ததும், செக் பண்ண வேண்டாம் அனுப்பி விடுங்கள் என சொல்கிறார் அருண். இவன் அதுக்குள்ள திருந்திவிட்டானா என ஷாக் ஆகிறார் முத்து.

34
ரோகிணிக்கு தெரியவரும் உண்மை

மறுபுறம் ரோகிணிக்கு போன் போடும் அவரது தோழி, கிரீஷ், ஸ்கூலை விட்டு ஓடிய விஷயத்தை கூறுகிறார். இதைக் கேட்டு பதறிப் போகும் ரோகிணி, அவன் போனா முத்து அல்லது மீனாவை தேடி தான் போயிருப்பான் என சொல்கிறார். அப்போ மீனாவுக்கு போன் பண்ணி கேட்டுப் பாரு என சொல்கிறார் அவரது தோழி, போன் பண்ணி கிரீஷ் வந்தானானு கேட்கவா முடியும் என ரோகிணி சொல்ல, நேரடியாக கேட்காமல், வேறு எதாவது பேசுறமாதிரி அதையும் கேளு என ஐடியா கொடுக்கிறார் ரோகிணியின் தோழி. இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் ரோகிணி.

44
கிரீஷை கண்டுபிடித்த முத்து - மீனா

பின்னர் செல்லும் வழியில் சீதாவை சந்திக்கும் முத்து, மீனா, அப்போது எதர்ச்சியாக காரின் டிக்கியை திறக்கிறார்கள். உள்ளே கிரீஷ் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து இருவரும் பதறிப்போகிறார்கள். டேய் முத்து மாமா வந்திருக்கேன் டா என தண்ணி தெளித்து எழுப்புகிறார் முத்து. ஆனால் கிரீஷ் மயக்க நிலையிலேயே இருக்கிறான். இதையடுத்து தான் ஸ்கூலில் காணாமல் போனது கிரீஷ் தான் என்கிற உண்மை முத்துவுக்கு தெரியவருகிறது. இதையடுத்து என்ன ஆனது. கிரீஷின் வரவால் ரோகிணி என்ன செய்யப் போகிறார்? அவர்தான் கிரீஷின் அம்மா என்கிற உண்மை வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories