எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி உடன் கொடைக்கானலில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கியிருந்த ஜீவானந்தத்துக்கு போன் பண்ணிய ஜனனி, அவரிடம் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றி கூறுகிறார். அவரிடம் தாங்கள் கண்டிப்பாக வந்துவிடுவோம் என உறுதியளிக்கிறார் ஜீவானந்தம். பின்னர் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. இதனால் பதறிப்போன ஜீவானந்தம், கையில் ஆயுதத்துடன் கதவின் அருகே செல்கிறார். அந்த சமயத்தில் ரூமில் இருந்து வெளியே வரும் பார்கவி, அங்கு இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயல்கிறார்.
24
பதற்றத்தில் பார்கவி
பார்கவியை தடுத்து நிறுத்தும் ஜீவானந்தம், இருவரும் சென்றால் கொன்றுவிடுவார்கள். முதலில் நான் மட்டும் சென்று பார்க்கிறேன் என சொல்லிவிட்டு, கையில் உருட்டுக் கட்டையோடு வீட்டை விட்டு வெளியே சென்று பார்க்கிறார். பார்கவியும் ஜன்னல் வழியாக என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விடுகிறார். செம திகிலூட்டும் காட்சிகளோடு, ஒரு திரில்லர் படம் பார்த்தது போன்ற ஃபீலிங்கை நேற்றைய எபிசோடில் உணர முடிந்தது. இறுதியாக பார்கவி கதவின் அருகே அமர்ந்திருக்கும் போது ஒரு நபர் வந்து கதவை தட்டுவது போன்ற காட்சிகளுடன் நேற்றைய எபிசோடு முடிக்கப்பட்டு இருந்தது.
34
பூஜைக்கு வந்த பனிக்கர்
இதையடுத்து இன்றைய எபிசோடில், மண்டபத்தில் தர்ஷன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. அப்போது பூஜை செய்வதற்காக சக்தி வாய்ந்த பூசாரியான பனிக்கர் அங்கு வருகிறார். அவர் வந்ததும், தங்களுக்கு பூஜையை நடத்த மூன்று அறைகள் வேண்டும் என கேட்பதோடு, அங்கு வந்திருக்கும் ஆதி குணசேகரனின் மாமாவை பூஜைக்கு இடையே வரக்கூடாது என்று உத்தரவிடுகிறார் பனிக்கர். அவர் வந்தால் அனைத்தும் நெகடிவ் ஆக முடியும் என எச்சரிக்கிறார்கள். அதற்கு அவர் பெரிய சேதம் வரப்போகுது என எச்சரிக்கிறார்.
மறுபுறம் ஓரமாக நின்று கொண்டிருந்த நந்தினி மற்றும் ரேணுகாவை பார்த்து, அவர்கள் ஒரு பெண்ணை முடிவு பண்ணி இருப்பதாக சொல்கிறார் பனிக்கர். ஆனால் நீங்க வேறொரு முடிவை நோக்கி வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள் என சொன்னதும் ஆதி குணசேகரன் அரண்டு போகிறார். மேலும் இந்த கல்யாணத்தில் மிகப்பெரிய போராட்டம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார் பனிக்கர். இதையடுத்து என்ன ஆனது? பார்கவியும், ஜீவானந்தமும் உயிருடன் வந்தார்களா? கல்யாணத்தில் இருக்கும் சிக்கலை பனிக்கர் சரி செய்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடை இனி வரும் எபிசோடுகளில் கிடைக்கும்.